
வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற்று இருப்பது தகுதியாக கருதப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பூசி குறித்த பல முக்கியமான தகவல்களை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை நிர்வாக குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும், கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதது சர்வதேச பயணத்தைத் தவிர்க்க ஒரு காரணமாக ஏற்க முடியாதென வலியுறுத்தப்பட்டிருந்தது.
உலக சுகாதார அமைப்பின் அவசர சேவைகளின் தலைவர் வைத்தியர் மைக் ரியன், புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


