அமீரகத்தில், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி

0
3

அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதும் பல்வேறு மையங்களில் தடுப்பூசி போடுவது வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்கள பணியாளர்களும், அரசு ஊழியர்களும், பொதுமக்களும், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமீரகத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 154 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமீரகம் முழுவதும் இதுவரை 16 லட்சத்து 65 ஆயிரத்து 987 பேர் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி போடுவதன் மூலம் கொரோனா பரவலை வேகமாக கட்டுப்படுத்த முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முயற்சி வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரத்யேகமாக மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ நிலையங்களும் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

தடுப்பூசி போட வருபவர்களுக்கு ஏற்ற வகையில் அதற்கான மருந்து கையிருப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்த வண்ணம் உள்ளனர்.

சார்ஜா எக்ஸ்போ சென்டரில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இங்கு தடுப்பூசி போடுவதற்காக வருபவர்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதேபோல் அமீரகத்தின் பிற பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here