அமீரகத்தில் கொரோனா தொற்று- ஒரே நாளில் 3,407 பேர் பாதிப்பு

0
2

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 262 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 407 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 168 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 7 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 25 ஆயிரத்து 655 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here