ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகளின் படைத்தளங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ், தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை திருப்பப்பெறுவேன் என அறிவித்திருந்தார். அந்த வகையில், பல முறை இரு நாடுகளில் இருந்தும் அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில், அதிபர் டிரம்பின் பதவி காலம் 19-ம் தேதியுடன் முடிவடைந்து 20-ம் தேதி ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன்னதாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பெருமளவு படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இரு நாடுகளில் இருந்தும் கணிசமான அளவு படைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு 2 ஆயிரத்து 500 வீரர்கள் மட்டுமே நிலைநிறுத்தப்படுகின்றனர். அதேபோல் ஈராக்கிலும் தற்போது பணியில் உள்ள வீரர்களில் பெருமாளானோர் திருப்பப்பெறப்பட்டுள்ளனர். ஈராக்கிலும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரம் பேர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் 2 ஆயிரத்து 500 வீரர்களும், ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரத்து 500 வீரர்களும் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

0
5

மைக் பென்ஸ் – கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
ஆனால், அதிபர் டொனால்டு டிரம்ப் தொடக்கத்தில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்தார். இதனால், அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும்

கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது.

அப்போது நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிகாரத்தை கையில் எடுத்த துணை அதிபர் மைக் பென்ஸ் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்தினார்.

அதிபர் டிரம்பின் உத்தரவின்றி துணை அதிபர் மைக் பென்ஸ் இந்த உத்தரவை பிறப்பித்தார். மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றார் என்ற அறிவிப்பை பாராளுமன்றத்தில் பென்ஸ் உறுதிபடுத்தினார். மேலும், வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்று விழாவிலும் மைக் பென்ஸ் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், துணை அதிபராக பொறுப்பில் உள்ள மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்று துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலா ஹாரிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மைக் பென்ஸ் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிசுக்கு தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தற்போதுவரை வாழ்த்து தெரிவிக்காத நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here