அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி அறிமுகம்

0
6

கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது.
இதில் 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ஒடிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, 108 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா, 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 3D TOF சென்சார், 40 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
 கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் எஸ் பென் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இதனை விரும்புவோர் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும்.
இந்த ஸ்மார்ட்போன் பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி நடைபெறுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here