ஆஸி ஓபனுக்கு முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளானர் ஆண்டி முர்ரே

0
2

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர் அடுத்த மாதம் அவுஸ்திரேலிய ஒபன் தொடரில் பங்கேற்பது தற்சமயம் கேள்விக் குறியாகியுள்ளது.

33 வயதான ஆண்டி முர்ரே அவுஸ்திரேலிய ஓவனில் பங்கேடுப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் தற்சமயம் முர்ரே அவரது வீட்டியில் தனிமைப்படுத்தலில் உள்ளார். எனினும் அவரது உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளமையினால், பெப்ரவரி 08 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் தான் பங்கேடுக்க முடியும் என்று நம்புவதாகவும் முர்ரே தெரிவித்துள்ளார்.

முர்ரே மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here