பொன்னியின் செல்வனில் இணைந்த பிரபல நடிகர்

0
2

மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 9 மாதங்களாக தடைபட்டிருந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரகாஷ் ராஜ்
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், மணிரத்னத்துடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இருவர் படத்தில் தொடங்கிய பயணம் இன்றளவும் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here