இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு

0
1

இந்தியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, அஜிங்யா ரஹானே (கேப்டன்), மயங்க் அகர்வால், ரிஷாப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர்,  நவ்தீப் சைனி, முகமது சிராஜ், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், புகோவ்ஸ்கி அல்லது மார்கஸ் ஹாரிஸ், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here