முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பிஎஸ்5

0
3

சோனி பிளேஸ்டேஷன் 5

சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. பிஎஸ்5 முன்பதிவு அமேசான் இந்தியா, க்ரோமா, ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ரிலையன்ஸ் டிஜிட்டல், சோனி சென்டர் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட மையங்களில் நடைபெற்றது.
முன்பதிவு சரியாக 12 மணிக்கு துவங்கிய நிலையில், 12.10 மணிக்கே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக வெளிநாடுகளிலும் இதேபோன்று பிஎஸ்5 யூனிட்களுக்கு பெரும் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 சோனி பிளேஸ்டேஷன் 5
பிஎஸ்5 மட்டுமின்றி, டூயல்சென்ஸ் கண்ட்ரோலர், மீடியா ரிமோட் உள்ளிட்டவைகளையும் முன்பதிவு செய்ய முடியும். இவற்றின் விலை முறையே ரூ. 5,990 மற்றும் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட், பிஎஸ் ஹெச்டி கேமரா மற்றும் டூயல்சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அக்சஸரீகளின் முன்பதிவு இதுவரை துவங்கப்படாமல் உள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here