குறைந்த விலையில் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

0
1

கூல் பேஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

கூல்பேட் நிறுவனம் இந்திய சந்தையின் ஆடியோ அக்சஸரி பிரிவில் களமிறங்கி இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் கூல் பேஸ் பட்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இயர்பட்சில் டீப் பேஸ் டிரைவர்கள், ப்ளூடூத் 5, டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூல் பேஸ் பட்ஸ் மாடலில் 13 எம்எம் டைனமிக் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவை சிறப்பான பேஸ் மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.
 கூல் பேஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்
மேலும் இதில் ப்ளூடூத் 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இது சீரான மற்றும் வேகமான கனெக்டிவிட்டியை வழங்குகிறது. எடை குறைந்த டால்பின் டிசைன் 2.0 கொண்டிருக்கும் கூல் பேஸ் பட்ஸ் 49 கிராம் எடை கொண்டிருக்கிறது.
இதன் சார்ஜிங் கேஸ் டிஜிட்டல் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பேட்டரி அளவை காண்பிக்கிறது. இதன் இயர்பட் ஒவ்வொன்றிலும் 40mAh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளன.
இவை 4.5 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்ஸ் 20 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த இயர்பட்ஸ் குவிக் சார்ஜ் வசதி கொண்டிருக்கிறது. இதனை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம்.
புதிய கூல்பேட் கூல் பேஸ் பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1199 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here