முதல் விற்பனையில் ரூ. 200 கோடி ஈட்டிய சியோமி ஸ்மார்ட்போன்

0
3

சியோமி எம்ஐ 10ஐ

சியோமி இந்தியா தனது புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதல் விற்பனையில் மட்டும் ரூ. 200 கோடி வருவாய் ஈட்டி இருப்பதாக அறிவித்து உள்ளது. இது அனைத்து தளங்களில் நடைபெற்ற விற்பனையை உள்ளடக்கிய தொகை ஆகும்.
புதிய எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக பிரைம் சந்தாதாரர்களுக்கு ஜனவரி 7 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி எம்ஐ வலைதளம், எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ ஸ்டூடியோஸ் போன்ற தளங்களில் விற்பனைக்கு வந்தது.
இந்தியாவில் சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அமேசான் இந்தியா தளத்தில் அனைத்து பிரிவுகளில் அதிகம் விற்பனையான பொருட்கள் பட்டியலில் எம்ஐ 10ஐ இடம்பெற்று இருக்கிறது.
புதிய சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
 சியோமி எம்ஐ 10ஐ
சியோமி எம்ஐ 10ஐ சிறப்பம்சங்கள்
– 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
– அட்ரினோ 619 GPU
– 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி
– 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.75, LED பிளாஷ்
– 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார்
– 2 எம்பி டெப்த் கேமரா
– 2 எம்பி மேக்ரோ கேமரா
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.45
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53)
– 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 4820 எம்ஏஹெச் பேட்டரி
– 33வாட் பாஸ்ட் சார்ஜிங்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here