594 பேர் நாடு திரும்பும் போது 249 பேர் வௌிநாடுகளுக்கு

0
0
நாட்டிற்கு வருகை தர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 594 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குவைட் நாட்டில் இருந்து 376 பேர், டுபாயில் இருந்து 90 பேர், ரியாத்தில் இருந்து 50 பேர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து 41 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலயத்தில் 249 இலங்கையர்கள் சேவை நோக்கத்தின் அடிப்படையில் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here