கஞ்சாவுடன் ஒருவர் கைது

0
39

நோர்வூட் சென்ஜோன் – டிலரி கீழ் பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2500 மில்லி கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர் .

நோர்வுட் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நோர்வுட் சென்ஜோன் டிலரி கீழ் தோட்டப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 2500 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யபட்டுள்ளார்.

கைதுசெய்யபட்ட சந்தேக நபரை அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கையினை நோர்வுட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here