மக்களே நம்பி ஏமாறாதீர்கள – காவல் துறை ஊடகப்பேச்சாளரின் அவசர கோரிக்கை..!

0
0

சமூக வலைத்தளங்கள் ஊடாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் வாயிலாகவோ பரப்பப்படும் போலி தகவல்களை நம்பி ஏமாற்றமடைவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

போலி தகவல்கள் வாயிலாக மக்களை ஏமாற்றிய நைஜீரிய நாட்டை சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் சில நைஜீரியர்களால் இந்த சட்டவிரோத செயல்கள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படலாம் எனவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு குறித்த நைஜீரிய பிரஜைகள் மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசிக்கு அல்லது வட்ஸ்ஏப், உள்ளிட்ட இணையத்தள செயலிகளுக்கு பணப்பரிசினை வென்றுள்ளதாக குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர்.

குறித்த பணப்பரிசினை பெற்றுக்கொள்வதற்கு ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இதனை நம்பி மக்களும் பணத்தை வைப்பிலிடுகின்றனர்.

வைப்பிலிட்ட பணத்தை பெற்றுக்கொண்டவுடன் அவர்கள் தலைமறைவாகிவிடுகின்றனர்.

இவ்வாறே மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்த ஊடகப்பேச்சாளர் இது போன்று மேலும் பல திட்டங்களையும் நைஜீரிய பிரஜைகள் வகுத்துள்ளனர் என குறிப்பிட்டார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here