நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

0
0

நாட்டில் கொவிட்19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 662 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 49 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில், 660 பேர் பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களும் 2 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, முக்கொத்தணிகளின் நோயாளர் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய முக்கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது.

8 ஆயிரத்து 823 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம், நேற்றைய தினம் 708 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையில் 27 ஆயிரத்து 61 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, பொகவந்தலாவையில் மேலும் இரண்டு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

பொகவந்தலாவ – கெர்கஸ்வோல்ட் மத்தியப் பிரிவில் ஒருவருக்கும், பொகவந்தலாவை லொய்னோன் தோட்டப் பகுதியை சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரையிலும் மொத்தமாக 35 தொற்றுறுதியானவர்கள் பொகவந்தலாவை பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள போதிலும் ஏனைய நோய்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அச்சமின்றி சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தங்களது ஏனைய நோய்க்கான சிகிச்சைகளை வைத்தியசாலைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறித்தினார்.

இதேவேளை , பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இதுவரை இல்லை என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் , கொழும்பில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பினும் மனித வளம் குறைவாகவே இருப்பதாக கொழும்பு மாநகர முதல்வர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here