கொழும்பு பிரதேசங்கள் சிலவற்றுக்கு இன்று (19) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெடடு அமுல் படுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று (19) காலை 9 மணி முதல் நாளை (20) அதிகாலை 3 மணி வரை கொழும்பு 1,2, 10 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு 3, 4, 7, 8 மற்றும் 9 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


