கொரோனா அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக கொழும்பு, நுகேகொட, பத்தரமுல்ல பெயரிடப்பட்டுள்ளது!

0
1

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, 27 பொது சுகாதார ஆய்வாளர்கள் (PHI) பிரிவுகளை நாட்டில் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் ஏழு பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 19 பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பிரிவுகளும் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு நகரசபை பகுதிகள், நுகேகொட, பத்தரமுல்ல, கொலன்னாவ, கஹாதுடுவ, மொரட்டுவ மற்றும் கடுவெல ஆகியவை அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் ராகம, மினுவாங்கொட, வத்தளை, திவுலபிட்டிய, ஜா – எல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல, வேயங்கொடை, களனிய, மஹர, தொம்பே, பூகொட, மீரிகம, பியகம, நீர்கொழும்பு மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்கள் அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here