மட்டக்களப்பில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0
1

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியில் மேலும் 16 பேர் கொவிட் – 19 தாக்கத்திற்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுவந்ததாக தெரிவிக்கப்படும் 65 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனைகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் சோதனையில் 11 பேர் இனங்காணப்பட்டதுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் சோதனை மூலம் 16 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.

அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அநாவசியமாக வெளியில் செல்வதையும் தவிர்த்து கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here