20ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

0
0

20ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி அதிகாரபூர்வமாக கோரிக்கை முன்வைத்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியல்லவினால் இது தொடர்பிலான கடிதமொன்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொவிட்-19 அனர்த்தம் காரணமாக அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இசைவாக நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்படவில்லை என லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதே சுகாதார விதிமுறைகளுக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, 20ம் திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை முன்வைப்பதாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here