புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் ஆராய்ச்சியில் வெளியான தகவல்..

0
1

புதிய கொரோனா வைரஸ் மனித தோலின் மேற்பரப்பில் சுமார் ஒன்பது மணி நேரம் உயிர்வாழ முடியும், இது இன்ஃப்ளூவன்ஸா ஏ வைரஸ் மனிதனின் மேற்பரப்பில் தங்கியிருக்கும் காலத்தைவிட ஐந்து மடங்கு காலம் அதிகம் என்று ஜப்பானில் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

கியோட்டோ ப்ரிபெக்சுரல் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தொற்றுநோயியல் நிபுணர் ரியோஹெய் ஹிரோஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் புதிய கொரோனா வைரஸ் மதுசாரம் அடிப்படையிலான கிருமிநாசினி அல்லது அதே செறிவின் எதனோல் திரவத்தால், 15 விநாடிகளுக்குள் செயலிழக்கப்படுவதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து மக்கள் தங்கள் கைகளை மதுசாரம் கலந்த தொற்று நீக்கிகளை பயன்டுத்தி நன்கு கழுவ வேண்டும் அல்லது மதுசாரம், சார்ந்த கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் ஹிரோஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

 LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here