விட்ட கேட்சை அற்புதமாக பறந்து பிடித்த டோனி! மறுபுறம் பாய்ந்து பிடித்த ஜடேஜா: மிரள வைக்கும் காட்சிகள்

0
4

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது, டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இப்போட்டியின் கடைசி ஓவரிரை சென்னை அணி சார்பில் பிராவோ வீசினார். அப்போது கொல்கத்தா அணி சார்பில் மாவி துடுப்பெத்தாடிக் கொண்டிருந்த போது, பிராவோ வீசிய பந்தை அடித்து ஆட முற்பட்டார்.

ஆனால் பந்தானது பேட்டின் விளிம்பில் கீப்பரிடம் இருந்து சற்று தூரம் விலகி செல்ல, உடனே டோனி அந்த பந்தை தாவி பிடிக்க பார்த்தார், ஆனால் பந்தானது அவரது கையில், பறக்க, உடனே டோனி விட்ட கேட்சை பறந்து பிடித்தார்.

இந்த கேட்சை பார்த்த போது, டோனி தன்னுடைய பிட்னஸை இப்போது வரை எப்படி வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அதே போன்று ஆட்டத்தின் 11-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கரண் வீசிய பந்தை, கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுனில் நரைன் லெக் திசையில் அடித்து ஆடினார்.

அனைவரும் பவுண்டரி அல்லது சிக்ஸர் என்று நினைத்து கொண்டிருக்க, அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த ஜடேஜா பாய்ந்து பிடித்து, பவுண்டரி கோட்டினை ஒட்டுவதற்குள், அருகில் இருந்த பீல்டர் டூபிளிசிஸ் இடம் வீசினார்.

டூபிளிசிஸ் அந்த பந்தை அற்புதமாக பிடித்தார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here