கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டு! பொலிஸார் வெளியிட்ட அறிக்கை

0
3

கனடாவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

ரொரன்றோ பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் உட்பட பல குற்றச்சாட்டுக்களின் கீழ் 54 வயதான சாந்தகுமார் கந்தையா என்பவர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஜூலை 11, 2020 சனிக்கிழமை, இரவு 10:30 மணிக்கு, வூட்பைன் கடற்கரை பகுதியில் ஒரு நபர் சக்தி வாய்ந்த படகு ஒன்றை செலுத்தியிருக்கின்றார்.

அந்தப் படகில் இருவர் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த படகில் மேலும் இருவர் இருந்ததாகவும் அதாவது அவர்கள் இருவரையும் கடத்தி வன்புணர்வு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதம் 7ம் திகதி நடந்ததாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் தொடர்பாக சாந்தகுமார் கந்தையா மீது பொலிஸார் மேலதிக குற்றச்சாட்டுகளை அறிவித்துள்ளனர்.

குறித்த தினத்தில் வூட்பைன் கடற்கரை மூவரை சந்தித்த சந்தேகநபர் அவர்களை தனது சக்தி வாய்ந்த படகில் அழைத்து சென்றதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் கரைக்குத் திரும்பும்படி கேட்டபோது, ​​அந்த நபர் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடம் “அநாகரீகமான செயல்களையும், பாலியல் வன்கொடுமைகளையும்” செய்தார் எனவும், சந்தேகநபர் இறுதியில் அழைத்து சென்றவர்களை கரைக்கு திருப்பி அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சாந்தகுமார் கந்தையா செவ்வாய்க்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டு, ஜூலை 7 சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை, கட்டாயப்படுத்தல், அநாகரீகமான செயல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரை (இன்று 7ம் திகதி உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here