ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ .12 லட்சம் அபராதம்: ஏதற்காக?

0
4

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ .12 லட்சம் அபராதம் வதித்துள்ளது.

அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்கடித்து.

ராஜஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. புள்ளிப்பட்டியலி்ல் 5 போட்டிகளில் 2 வெற்றிகள், 3 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகப் பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டதற்காக ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித்துக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

முன்னதாக, ஐபிஎல் 2020 தொடரில் இதுவரை பந்துவீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக எடுத்துக்கொண்டதற்காக பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் டெல்லி கேப்டன் ஸ்ரோயஸ் ஐயர் ஆகியோருக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here