ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெருமவை கைது செய்ய கோரிக்கை

0
24

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித தெவரப்பெரும ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இரண்டு உறுப்பினர்களும் நேற்று (15) பாராளுமன்றத்திற்கு கத்தி எடுத்துக் கொண்டு வந்ததற்கு எதிராகவே ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பாராளுமன்றம் இன்று கூடிய போது பாராளுமன்றத்தில் அமளி துமளியால் சபை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இருப்பினும் பாராளுமன்ற அமர்வுக்காக இன்று (16) வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர் அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

பாராளுமன்றத்தில் ​நேற்று கூடிய போது அமைதியற்ற சூழ்நிலை தோன்றியதுடன் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

மேலும் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணடப்பட்டமையால் இன்று சபை அமர்வுக்காக வருகை தரும் உறுப்பினர்கள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here