இராணுவ சீருடை அணிந்து பிறந்த நாள் கொண்டாடிய அழகு கலை நிபுணருக்கு எதிராக முறைப்பாடு?

0
1

இராணுவ சீருடைக்கு நிகரான உடையை அணிந்து பிறந்த நாள் விருந்தில் கலந்து கொண்ட அழகு கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சட்டத்தரணிகள் சிலர் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வைபவத்தின் போது அவர் அணிந்திருந்த இராணுவ இலட்சினையுடன் கூடிய ஆடை சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்தரணிகள் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த தின நிகழ்வில் கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்தை கவனத்தில் கொள்ளாது மாத்திரமல்ல, சமூக இடைவெளியோ அல்லது சுகாதார ஆலோசனைகளே இதன்போது பின்பற்றப்படவில்லை என சமூக ஊடகங்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சந்திமால் ஜயசிங்க தனது பிறந்த நாள் சம்பந்தமாக முகநூலில் வெளியிட்டிருந்த புகைப்படத்தை தற்போது நீக்கியுள்ளார் என தெரியவருகிறது.

 LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here