20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தால் பிரதமருடைய அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

0
37

ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்வதாக விசனம்
வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, இதனை நாம் முற்றாக எதிர்ப்பதாகவும் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நாட்டிலுள்ள பிரச்சினைகளில் அரசியலமைப்பு பிரச்சினை பிரதானமானது அல்ல. அதிகாரங்கள் அனைத்தையும் ஒருவரிடம் ஒப்படைத்து ஜனநாயக ஆட்சியிலிருந்து பிற்போக்கான ஆட்சியை நோக்கியே அரசாங்கம் செல்கிறது. சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடிய அதிகரத்தைக் கொண்ட மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்றத்தை ஒரு வருடத்திலும் கலைக்க முடியும் என்ற அதிகாரத்தை பிரதமருடைய அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன இல் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று நீதித்துறை நியமனங்கள் தொடர்பான அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

முன்னரைப் போன்றல்லாமல் முழுமையாக ஜனாதிபதிக்கு தேவையானவர்களை மாத்திரம் கொண்ட ஆணைக்குழுக்களே 20 இன் கீழ் கொண்டு வரப்படவுள்ளன. அமைச்சரவை , பாராளுமன்றம் , நீதித்துறை என அனைத்து அதிகாரங்களையும் ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார். பிரதமருடைய அதிகாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடைய ஆட்சியின் கீழ் செயற்பட்ட பிரதமர்களுடையே நிலையே தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது.

பசிஸ் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொள்வதை விட அதற்காக அரசியலமைப்பை மாற்றியமைப்பது சிறந்தது எணக்கருதி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அது மாத்திரமின்றி மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறினாலும் அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.

அவசர சட்டத்தைக் கொண்டு வருவதற்காக அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு காணப்படுகின்ற உரிமையை நீக்குவதற்கு குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here