ஐக்கிய அரபு எமிரேட்ஸ் KFC எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழப்பு.

0
24

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE ) KFC உணவகத்தில் திங்கள்கிழமை நடந்த  வெடிப்பில்  இலங்கையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கே.எஃப்.சி உணவகத்தில் பணிபுரிந்தமாத்தறையை  சேர்ந்த சமித் ரங்கன உயிரிழந்துள்ளதாக  அந்நாட்டு ஊடக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு எமிரேட் தலைநகர் அபுதாபி மற்றும் துபாயில் இரண்டு தனித்தனியாக எரிவாயு வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று காவல்துறை மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ரஷீத் பின் சயீத் வீதியில்  உள்ள கே.எஃப்.சி மற்றும் ஹார்டீஸ் உணவகங்கள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களும் சேதமடைந்தன.

துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் எரிவாயு சிலிண்டரால் ஏற்பட்ட இதேபோன்ற வெடிப்பில் மற்றொரு நபர் கொல்லப்பட்டார், இது கட்டிடத்தின் தரை தளத்தை சேதப்படுத்தியது என்று துபாய் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஒருவர் மேற்கோள் காட்டியுள்ளார்.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here