தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகர்களாக செயற்படுமாறு சங்கா, மஹேல வை அழைத்த நாமல்

0
7

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகர்களாக செயற்படுமாறு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
சங்கக்கார மற்றும் ஜயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here