இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பாதுகாப்பு செயலாளரின் வௌிப்படுத்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 196 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் மீது பல்வேறு மேல் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் 29 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், 79 பேருக்கு எதிராக 25,653 குற்றச்சாட்டுக்களின் கீழ் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

PCR பரிசோதனைகள் 7 இலட்சத்தை தாண்டின

farookshareek

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை..பல இடங்களில் சீரான வானிலை!

farookshareek

60 பவுண் நகைகளுடன் யாழ் வந்த சுவிஸ் தமிழ் குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

farookshareek

Leave a Comment