இலங்கை

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தவிர நாட்டின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தெற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

Related posts

40 வயதுக்கு மேற்பட்டோர் கூடுதல் கவனம் தேவை

farookshareek

புர்கா அரேபியக் கலாசாரம்

farookshareek

எக்ஸ் பிரஸ் பர்ள்‘ கப்பல் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

farookshareek

Leave a Comment