இலங்கை

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில்,

நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும் சந்தர்ப்பம் முதல் கப்பலில் இருந்து இறக்கப்படும் வரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நிறுவனங்கள் சிலவற்றினால் சம்பந்தப்பட்ட எரிபொருளின் தரம் பரிசோதனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு நிறுவனத்திலும் எரிபொருள் வகைகளின் தரம் குறித்த பிரச்சினை பதிவாகவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சில ஊடகங்கள் இது தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் அமைச்சர் கூறினார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்குத் தேவையான எரிபொருளை குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Related posts

ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு

farookshareek

மேலும் 558 பேர் குணமடைந்தனர்

farookshareek

260 கைதிகளுக்கு விடுதலை

farookshareek

Leave a Comment