இலங்கை

1 ஆம் திகதி முதல் பால்மா சந்தைக்கு வரும்…

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம் கவனத்திற்கொள்ளாது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமது நிறுவனம் மீண்டும் பால்மா உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இவை அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

இதேவேளை, பால்மா விலை அதிகரிக்கப்பட்டால் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்குமென பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாவனையாளர்கள் கூடுதல் விலைக்கு பால்மாவை கொள்வனவு செய்ய மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

பால்மா ஒரு கிலோ சுமார் 2 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பைக்கெட்டின் விலை 800 ரூபாவாகும். இவ்வாறான நிலையில் தமது நிறுவனங்களை நடத்துவதில் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

24 மணிநேரத்தில் 829 பேர் கைது

farookshareek

காட்டில் காணாமல் போன 3 வயது சிறுவன் மீட்கப்பட்டுள்ளார்.

farookshareek

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு

farookshareek

Leave a Comment