இலங்கை

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை வழமை போன்று இடம்பெறுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருளைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சர் காமினி லொக்குகே உடன்பாடு தெரிவித்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிட்டதாக இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குத் தேவையானளவு எரிபொருள் தற்போது வழங்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவரான சுமித் விஜேசிங்ஹ தெரிவித்துள்ளார்.

தொழில்பேட்டைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

குறைந்த விலையில் அரிசி!

farookshareek

விபத்தில் கிராம அலுவலர் மரணம்

farookshareek

4 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

farookshareek

Leave a Comment