இலங்கை

அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்..! முழு விபரம் இணைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

புதிய விலைகள் பின்வருமாறு….

ஒடோ டீசல் : 55 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய விலை 176 ரூபாவாகும்.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் : 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 254 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் : 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 283 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் : 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூபா 254 ரூபாவாகும்.

இதேவேளை, அனைத்து வகையான டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று முன்தினம் (11) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.

இதற்கமைய ஒரு லீட்டர் டீசல் 75 ரூபாவாலும், ஒரு லீட்டர் பெற்றோல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனபடிப்படையில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவன பெற்றோலின் புதிய விலை 254 ரூபாவாகவும் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 214 ரூபாவாகவும் அதிகரிப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இரண்டு தடவைகள் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்

farookshareek

அரச நிதியை வீணாக்க இடமளிக்க முடியாது.

farookshareek

நோயெதிர்ப்புத் திறன் கூடிய ஒற்றை டோஸ்

farookshareek

Leave a Comment