March 11, 2022 12:20 pm
பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, இலங்கைக்கு இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை.

இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு அங்குள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில், நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது.