இலங்கை

கிண்ணியாவில் துப்பாக்கி சூடு – இருவர் வைத்தியசாலையில்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுவூற்று கிராம சேவகர் பிரிவில் நேற்றிரவு (7) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

30 வயதுடைய நஜிம்கான் வசிம், 32 வயதுடைய சாகுல் ஹமீத் முகம்மது ரமீஸ் ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தேடி பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறுகளை இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்

farookshareek

ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

farookshareek

விருந்துபசாரத்தில் பங்கேற்ற மேலும் 6 பேர் கைது

farookshareek

Leave a Comment