சினிமாமீண்டும் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து! by farookshareekMarch 7, 2022March 7, 202205 Share0 விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார். தில் ராஜு இப்படத்தை தயாருக்கிறார். தளபதி 66 படத்தை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தளபதி 67 படத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பார் என்று புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கலைப்புலி எஸ்.தானு இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி, தெறி ஆகிய படங்களை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.