இலங்கை

கோட்டாபய அரசுக்கு புதிய தலையிடி! 16 எம்பிக்கள் தனித்து இயங்க முடிவு

அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற பேச்சையடுத்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிணங்க, அரசின் பங்காளிக் கட்சிகளாகச் செயற்படும் விமல் வீரவன்சவின் கட்சியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், வாசுதேவ நாணயக்காரவின் கட்சியிலிருந்து இரண்டு பேரும், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்னதேரர், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட 16 பேரே நாடாளுமன்றத்தில் இவ்வாறு சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது

farookshareek

கோதுமை ஏற்றுமதிக்கு தடை!

farookshareek

பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல பெறுபேறு

farookshareek

Leave a Comment