இலங்கை

சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் மனைவியிடம் இன்று (12) வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சஹ்ரான் ஹசீமின் மனைவி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வாக்குமூலம் வழங்க அனுமதிக்குமாறு விசேட புலனாய்வுப் பிரிவினர் கடந்த 10 ஆம் திகதி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

மேலும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சென்று உரிய வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 04 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குளியாப்பிட்டிய நீதவான் ஜனனி வீரதுங்க உத்தரவிட்டிருந்தார்.

Related posts

புற்றுநோயை ஏற்படுத்தும் அழகுசாதன பொருள்கள் கைப்பற்றல்

farookshareek

கடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான செய்தி

farookshareek

நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்

farookshareek

Leave a Comment