உலகம்

ஒரு மில்லியன் டொலர் ஓவியத்தை பாழாக்கிய பாதுகாவலருக்கு ஏற்பட்டுள்ள நிலை

சோவியத் காலத்தில் வரையப்பட்ட ஓவியத்தில் கண்களை வரைந்ததாக ரஷ்யக் கலைக் காட்சிக்கூடத்தின் பாதுகாவல் அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வேலையின் முதல்நாள் அன்று அவர் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் யேகட்டரின்பர்க்கிலுள்ள யெல்ட்சின் சென்ட்டருக்குச் சென்றிருந்த இருவர், அனா லெபோர்ஸ்காயாவின் ‘த்ரீ பிகர் ஓவியத்தில் பேனாவால் கண்கள் வரையப்பட்டதைக் கண்டனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து அந்தப் பாதுகாவல் அதிகாரி வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ஒரு மில்லியன் டாலர் ஓவியத்தை பால்பாயிண்ட் பேனையை பயன்படுத்தி கண்களை வரைந்து பாழாக்கியதாக பாதுகாவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த அதிகாரிக்கு அபராதமும் 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

ஓவியத்தை மீண்டும் சீரமைக்க சுமார் 3,345 டொலர்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

5 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு!

farookshareek

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்!

farookshareek

ரஷியா – உக்ரைன் போரில் எதிர்பாராத திடீர் திருப்பம்!

farookshareek

Leave a Comment