இலங்கை

மட்டக்களப்பில் கடும் மழை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்போக அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் பெய்யும் மழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கையில் 3, 1/2 கோடி பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றம்

farookshareek

இரண்டு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

farookshareek

37,522 பேர் வெளியேறினர்

farookshareek

Leave a Comment