இலங்கை

கோர விபத்தில் காலை இழந்த நபர்…!

சாலியவெவ 19 ஆம் தூண் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதிய பயங்கர விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

அதே பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குறித்த விபத்தில் காயமடைந்துள்ள நிலையில், மோட்டார் சைக்கிளில் ஓட்டுனரின் கால் ஒன்று உடைந்து உடலில் இருந்து பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான காரின் சாரதி தலைமன்னார் வைத்தியசாலையில் வைத்தியர் என்பதுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான வைத்தியர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு

farookshareek

பிரதமருக்கு ஆதரவு வழங்க சுயாதீன 10 கட்சிகள் இணக்கம்

farookshareek

புதையல் தோண்ட முயற்சி – ஆறு பேர் கைது

farookshareek

Leave a Comment