விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் படு ஹிட். அப்படி ஹிட்டான தொடர்களை மறு ஒளிபரப்பு செய்தாலும் பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்களும் உள்ளார்கள்.
சரவணன்-மீனாட்சி தொடரில் மீனாட்சியாக 2,3 பாகங்களில் நடித்தவர் நடிகை ரச்சிதா. இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மஹா என்ற வேடத்தில் நடித்து வந்திருந்தார்.
ஆனால் திடீரென தொடரில் இருந்து பாதியிலேயே அவர் வெளியேறிவிட்டார், காரணத்தையும் அவர் கூறியிருந்தார்.
தற்போது அவர் புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார், ஆனால் விஜய்யில் இல்லை. கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற பெயரில் புதிய சீரியல் நடிக்கிறார்.
அதற்கான குட்டி புரொமோ வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.