சினிமா

எல்லா Area-விலும் அஜித் தான், திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் வலிமை திரைப்படம்..

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படம் விரைவில் வெளியாகயிருக்கிறது.

கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் தற்போது வலிமை திரைப்படம் வரும் 24 ஆம் தேதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த வருடம் வெளியான எந்த ஒரு திரைப்படமும் திரையரங்குகளுக்கு லாபத்தை தரவில்லை. விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படமும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனிடையே இப்போது அனைவரும் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர், மதுரையில் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் வலிமை வெளியாகிறது. இதன்மூலம் மதுரையில் ஓப்பனிங் வசூலில் வலிமை சாதனை படைக்கும் என்கிறார்கள்.

சென்னையிலும் அதிக அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வலிமை படத்தை பெரியளவில் எதிர்பார்த்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  

Related posts

அரச மரியாதையுடன் விடைபெற்றார் எஸ்.பி.பி

farookshareek

உலகில் மிக பிரபலமான காரை வாங்கிய ஆர்ஜே பாலாஜி!

farookshareek

ஆடையே இல்லாமல் மிக மோசமான காட்சிகளில் நடித்த தீபிகா படுகோன்

farookshareek

Leave a Comment