சினிமா

உலகில் மிக பிரபலமான காரை வாங்கிய ஆர்ஜே பாலாஜி!

ரேடியாவில் தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. இவரது சினிமா விமர்சனம் மிகவும் பிரபலம். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த அவர், நானும் ரௌடி தான் படத்தில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடித்தார். அந்தப் படம் வெற்றிபெற நகைச்சுவை நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.

இந்த நிலையில்தான் எல்கேஜி படத்தில் தானே கதை எழுதி நடிகராக நடித்தார். அந்தப் படம் வெற்றிபெற, நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி நடித்தார். தற்போது வீட்ல விசேசங்க படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஹிந்தியில் வெற்றிபெற்ற பதாய் ஹோ படத்தின் தமிழ் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்ல விசேசங்க படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், ஊர்வசி யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. மேலும் கிரிக்கெட் போட்டிகளில் இவர் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் உலக அளவில் பிரபலமான காரான மினி கண்ட்ரிமேன் கூப்பர் எஸ் ஜேசிடபுள்யு என்ற காரை ஆர்ஜே பாலாஜ வாங்கியுள்ளார். இந்த காரின் மதிப்பு ரூ.50 லட்சம் வரை விற்கப்படுகிறது. தனது மனைவியுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் என்பதால் இப்படியா?- அதற்குள்ளே புலம்பும் ரசிகர்கள்.

farookshareek

பிக் பொஸ் பாவ்னிக்கு கொரோனா.

farookshareek

விஜய்யில் இருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு மாறிய பிரபல நடிகை- அட இவங்களா, என்ன சீரியல் தெரியுமா?

farookshareek

Leave a Comment