விளையாட்டு

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு!

 இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களம் காணும் பாகிஸ்தான் அணியும் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் 16 போ் கொண்ட இங்கிலாந்து அணியில் முக்கியத்துவம் மிக்க வீரா்களான ஜேம்ஸ் ஆண்டா்சன், ஸ்டூவா்ட் பிராட் ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். மேற்கிந்தியத் தீவுகளுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அந்நாட்டுக்கு, வரும் 24 ஆம் திகதி புறப்படுகிறது இங்கிலாந்து அணி.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ரௌஃப், ஷான் மசூத் ஆகியோா் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்தத் தொடா் மாா்ச் 4 ஆம் திகதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (தலைவர்), ஜானி போ்ஸ்டோ, ஜாக் கிராலி, மேத்யூ ஃபிஷா், பென் ஃபோக்ஸ், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், சாகிப் மஹ்மூத், கிரெய்க் ஓவா்டன், மேத்யூ பாா்கின்சன், ஆலி போப், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

பாகிஸ்தான் அணி: பாபா் ஆஸம் (தலைவர்), முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபிக், அஸாா் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம், ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, இமாம் உல் ஹக், முகமது நவாஸ், நௌமன் அலி, சஜித் கான், சௌத் ஷகீல், ஷாஹீன் ஷா அஃப்ரிதி, ஷான் மசூத், ஜாஹித் மஹ்மூத்.

Related posts

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உப தலைவர் இராஜினாமா

farookshareek

LPL போட்டியில் இருந்து கிறிஸ் கெயில் விலகல்!

farookshareek

இத்தாலிய சீரி ஏ தொடர்: இன்டர் மிலனை வென்றது ஏ.சி மிலன்

farookshareek

Leave a Comment