இலங்கை

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்…

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாாியான துசித்த பி. வனிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத் தளபதியின் செய்தி…

farookshareek

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை பணம் – பெண்கள் உட்பட பலர் கைது

farookshareek

STF துப்பாக்கிச் சூட்டில் சமீர சம்பத் பலி.

farookshareek

Leave a Comment