இலங்கை

நீர்மட்டம் குறைந்ததால் நீர் விநியோகம் தடை

கடந்த 2 ஆம் திகதி முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டசாலை, பலகொல்ல, பல்லேகெல பிரதேசங்களில் கடந்த 2 ஆம் திகதி முதல் நீர்வெட்டு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக பலகொல்ல சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்க முடியாதுள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து மின் உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையினால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் தாம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்

farookshareek

எம்.பிகளுக்கு Ipad’

farookshareek

இன்று 2,882 பேருக்கு கொவிட்-19 தொற்று

farookshareek

Leave a Comment