இலங்கை

இன்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பேருக்கு கொவிட்

நாட்டில் இன்றைய தினமும் பதிவான கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையின் படி இன்றைய தினத்தில் மாத்திரம் 1,243 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,544 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பயணக்கட்டுப்பாடு இன்று இரவு மீண்டும் அமுலாகிறது

farookshareek

ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

farookshareek

மேலும் 13 பேர் குணமடைந்தனர்

farookshareek

Leave a Comment