இந்தியா

கார் மோதி 4 பெண்கள் உயிரிழப்பு.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கரீம்நகரில் தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் கரீம் நகரில் இன்று காலை கமான் சந்திப்பு அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று டிவைடர் மீது மோதி நடைபாதையில் அமர்ந்திருந்த தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் 4 பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படு காயமடைந்தனர்.

இந்த பயங்கர விபத்துக்கு பின் காரில் இருந்த ஓட்டுநரும், உடன் இருந்தவர்களும் தப்பி ஓடிவிட்டனர். காரை ஓட்டிச் சென்றவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இறந்தவர்களின் 3 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவரின் அடையாளத்தை கண்டறிய முடியவில்லை. இந்த விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

farookshareek

அமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா

farookshareek

உதயநிதி ஸ்டாலின் கைது

farookshareek

Leave a Comment